நாளை ரிலீஸாகவுள்ள தனது ‘ஓ பேபி’படத்துக்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக மிக உயரமான கட் அவுட் வைத்து அசத்திய ரசிகர்களுக்கு ஆனந்தக் கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா அக்கினேனி.

2014-ல் வெளியான ‘மிஸ் கிரான்னி [miss granny]கொரியன் படத்தின் தெலுங்கு உல்டாவான ‘ஓ பேபி...எந்த சக்ககவுன்னாவே’ என்ற படத்தில் இளம் வயது சமந்தாவாகவும், 70 வயது பாட்டியாகவும் சமந்தாவே நடித்திருக்கும் படம் நாளை ஆந்திரா, தெலுங்கானாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸாகிறது.

இந்நிலையில் சமந்தா ரசிகர் மன்றத்தினர் ஹைதராபத் தியேட்டர் ஒன்றில் பெரிய ஹீரோக்களுக்கு இணையான அளவுக்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்து அதை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அப்பதிவை சமந்தாவுக்கு டேக் செய்து,...ஷம்மு உன் இந்தப்படத்தை வழக்கத்தை விட ஆர்வமாக எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பெரிய கட் அவுட் வைத்திருக்கிறோம்.உனக்கு மகிழ்ச்சிதானே? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அப்பதிவை ரீட்வீட் செய்து பதிலளித்திருக்கும் சமந்தா ‘அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்’என்று பதிலளித்திருக்கிறார்.