biggboss woman contastanst scolding actor ponnambalam

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெடிக்கப்போகும் பிரச்னையை முன் கூட்டியே அறிவிக்கும் நோக்கத்தில் வெளியாகியுள்ளது ஒரு ப்ரோமோ. அதில் நடிகர் பொன்னம்பலத்தை ஒட்டு மொத்த பெண் போட்டியாளர்கள் விமர்சித்து பேசுவது போல் உள்ளது.

இந்த ப்ரோமோவில் வைஷ்ணவி, ரம்யா மற்றும் மும்தாஜுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ஐஸ்வர்யா, ஆனந்த் நீங்கள் இந்த பெட்டில் வந்து உட்காருங்கள் என்று கூறினார். அப்போது பொன்னம்பலம் தூக்கத்தில் இருந்து எழுந்து... என இவர் முடிக்க ரம்யா வாயை திறந்து அசிங்கமாக பேசியதாக கூறுகிறார்.

பின் வைஷ்ணவி திரும்பவும் இவர் இப்படி செய்தால் கிழிந்து விடும் என கூறுகிறார். ரம்யா அடுத்த முறை என்னிடம் பேசினால் உங்க பெண்ணை பார்த்து இப்படிதான் பேசுவீங்களா என்று கேட்கிறேன் என கோவமாக பேசுகிறார்.

இதற்கு மும்தாஜ், தான் அவரிடம் இது குறித்து பேசுவதாக கூறி, பொன்னம்பலம் இருக்கும் இடத்திற்கு செல்கிறார் என்பது போல் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இப்படி அணைத்து பெண்களையும் கோவப்படுத்தும் அளவிற்கு என்ன பேசினார் பொன்னம்பலம்? என இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியவரும்.

Scroll to load tweet…