பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி 15 போட்டியாளர்களுடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட மறுநாள், பிரபல மாடல் மீரா மிதுன் 16வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார். 

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மேல் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில்,  பிக் பாஸ் வீட்டை விட்டு இதுவரை பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ஆகிய நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது 12 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.

இவர்களில் அடுத்த வாரம், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.  மேலும் வயல் கார்டு சுற்றிலும்,  சில பிரபலங்கள் என்ட்ரி ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அந்த வகையில் ஏற்கனவே 'ராஜா ராணி' சீரியல் நடிகை ஆலியா மானசா, சனம் ஷெட்டி, பவர் ஸ்டார், கஸ்தூரி ஆகிய பிரபலங்களில் பெயர் அடிப்பட்டது. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், வெளிநாட்டில் நடிகர், பாடகர், நடன ஆசிரியர் என எல்லா துறையிலும் கலக்கி வரும் ஜான்சன் பிலிக்சன்  பிக்பாஸில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு ஏற்ற போல் அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து கிளம்பியுள்ளார், பாய்.. பாய் மலேசியா என குறிப்பிட்டுள்ள இவர், அங்கிருந்து பாஸ்போட்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை வைத்து ரசிகர்கள், இவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த வயல் கார்ட் போட்டியாளரான என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

View this post on Instagram

Bye bye 👋 Malaysia

A post shared by jhonson filixson @ Rj vikraa (@jhonvikraa) on Jul 30, 2019 at 5:23am PDT