நட்சத்திர தம்பதி  மஞ்சுளா - விஜயகுமாரின் மகள் வனிதா, வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 

தளபதி விஜய் நடித்த, 'சந்திரலேகா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்தார். பின் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு, 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்துமுடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் வனிதா.

திருமணம், குடும்ப பிரச்சினை என திரையுலகை விட்டு ஒதுங்கிய வனிதாவுக்கு,  விஜய் ஸ்ரீஹரி, ஜோவிக்கா, ஜெயனித்தா, என ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆகாஷிடம் இருந்து  2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பின் அதே ஆண்டு ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. ஆனந்த் ராஜனுக்கும் வணிதாவிற்கும் பிறந்த மகள் தான் ஜெயனித்தா. 

வனிதாவுக்கு அவரின் இரண்டாவது திருமண வாழ்க்கையும் நிலைக்கவில்லை.  2010ஆம் ஆண்டு ஆனந்த் ராஜனிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

வாழ்க்கையில் மனதளவில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த வனிதா, தற்போது தன்னுடைய இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அதே நேரத்தில் இவரின் மகன் விஜய் ஸ்ரீஹரி முதல் கணவர் ஆகாஷ் அரவணைப்பில் உள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அடிக்கடி தன்னுடைய மகனின் பற்றி பகிர்ந்து கொண்டு மகன் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்தினார். இந்நிலையில் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, என்னுடைய தளபதி, சூப்பர் ஸ்டார், தல, உலகநாயகன், எல்லாமே நீ தான். என் வாழ்க்கை நீ தான். என்னுடைய விஜய் ஸ்ரீஹரி நீ பார்ப்பதற்கு தன்னுடைய தந்தை போலவே இருப்பதாக ஒரு ட்விட் போட்டுள்ளார்.

 வனிதாவின் அன்பை புரிந்த ரசிகர்கள் பலர், விரைவில் நீங்கள் மகனுடன் சேர வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை வனிதாவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

வனிதா போட்டுள்ள ட்விட் இதோ...