முந்தைய சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட 16 போட்டியாளர்களை பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்நிகழ்ச்சி தற்போது புதிய பரிணாமத்தில் மக்களை மகிழ்விக்க வருகிறது. அதன்படி ஓடிடி தளத்துக்காக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது. பிரத்யேகமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாராகும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ளது. 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ள இந்நிகழ்ச்சியின் புரோமோ நேற்று வெளியானது. இதில் முந்தைய சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறக்க உள்ளனர். மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

அதன்படி முதல் சீசனில் இருந்து சுஜா வருணி, பரணி, ஜூலி, சினேகன் ஆகியோரும், இரண்டாவது சீசனில் இருந்து ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், தாடி பாலாஜி ஆகியோரும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதா, ஷெரின் ஆகியோரும், நான்காவது சீசனில் அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும், 5-வது சீசனில் இருந்து சுருதி, நதியா சங் மற்றும் இசைவாணி கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே மல்லுக்கட்டியவர்கள் தான். இதன்மூலம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி வருகிற ஜனவரி 30-ந் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.