பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும், மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் வெளியேற்றப்படுகிறார்கள். அந்த வகையில் இதுவரை, பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வரமே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டவர்  சாக்ஷி.  மீரா திடீர் என சேரன் மீது வீண் பழி போட்டதால், மக்கள் மற்றும் சேரனின் ரசிகர்கள் கோபம் இவர் மீது திரும்பியதன் காரணமாக மீரா வெளியேற்றப்பட்டார்.

ஆனால், இந்த வாரம் கண்டிப்பாக சாக்ஷி தான் வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்கள் சற்றும் யோசித்து கூட பார்க்காத பிரபலம், 'ரேஷ்மா' வெளியேறியுள்ளார். 

ஏற்கனவே இந்த வாரம் எலிமினேஷனில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், பிக்பாஸ் ரேஷ்மாவை வெளியேற்றி இப்படி ஒரு ட்விஸ்ட் வைப்பர் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.  இது பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.