இன்று வெளியான ப்ரோமோவை வைத்தே, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனல் பிறக்கும் அளவிற்கு பிரச்சனைகள் இருக்கும் என்பது தெரிகிறது. முதல் ப்ரோமோவில் தர்ஷனிடம் - ஷெரின் 'affair ' வைத்துள்ளார். தர்ஷனுக்கு வெளியில் காதலி இருக்கும் போது, அவரை தேடி தேடி சென்று தொந்தரவு செய்வதாக கூறினார்.

இந்த வார்த்தையை கேட்டதும், ஷெரின் மட்டும் இன்றி, ஒட்டு மொத்த பிக்பாஸ்  குடும்பமே வனிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், வனிதாவின் வார்த்தையால் மிகவும் ஹட் ஆன, ஷெரின் இனி, வனிதா, தர்ஷன், மட்டும் அல்ல யாருடனும் பேச போவது இல்லை என கூறினார்.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஷெரின் நேற்றையதினம் தனக்கு கொடுத்த டாஸ்கை நிறைவாகவே செய்ததாக தெரிவிக்கிறார். இதற்கு வனிதா மறுப்பு கூறுகிறார். மேலும் தர்ஷன் சொல்ல வருவதையும் கேட்காமல் பதிலுக்கு பதில் கூறுகிறார். அதே போல் சாண்டி ஏதோ பேச, ஒவ்வொரு முறையும் ஏன் இந்த கேள்வி வருகிறது, வெட்டி முறிக்கிற வேலை இருந்தால் முதலில் அதை போய் பாருங்க என திமிராக பேசுகிறார்.

இதை தொடர்ந்து சேரன், மிகவும் கோவமாக எப்போதும் நீங்க தான் பேசணுமா, முட்டாள் மாதிரி அமர்ந்திருக்கிறோம் என கத்துகிறார். ஏற்கனவே பல பிரச்சனைகள் வந்த போது  கூட மிகவும் அமைதியாக இருந்த சேரன், முதல் முறையாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் போட்டியாளர்கள் அனைவரும் இந்த முறை வனிதாவுக்கு ரௌண்டு கட்டி பதில் கொடுத்து வருகிறார்கள்.