Asianet News Tamil

நிறுத்தப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி! அதிரடி தகவலை வெளியிட்ட நிறுவனம்!

வெள்ளித்திரை படங்களை விட, சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தான்,  வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் முதல், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் கவர்ந்து வருகிறது.
 

biggboss show temporary stopped for corona virus
Author
Chennai, First Published Mar 19, 2020, 12:25 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

வெள்ளித்திரை படங்களை விட, சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தான்,  வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் முதல், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் கவர்ந்து வருகிறது.

மக்களின் ஆர்வத்தை மூலாதாரமாக கொண்டு, டி.ஆர்.பியை பெற விதவிதமான நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர் தொலைக்காட்சி நிர்வாகத்தை சேர்த்தவர்கள். அந்த வகையில், ஹிந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி சமீப காலமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. 

 மேலும் செய்திகள்: விஜய் டிவி சீரியலில் இருந்து திடீர் என விலகிய முன்னணி நடிகை! அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்!
 

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் , போக போக அனைவரும் விரும்பி பார்க்க துவங்கிவிட்டனர். தமிழ் மற்றும் தெலுங்கில் 3 சீசன் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

நடிகர் மோகன்லால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.  60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், கடந்த வாரம் மலையாள ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் ரஜித் குமார் கடந்த 2013ல் பல பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் குழந்தைகள் திருநங்கைகளாக பிறக்கிறார்கள் போன்ற சர்ச்சை கருத்துக்களை கூறியே பேமஸ் ஆனவர்.  

 மேலும் செய்திகள்: படிச்சது 10 வது... வயசு 21 ! டிக்டாக் ஆபாச கன்னியை கடுப்பேற்றிய அந்த கேள்வி?
 

இப்படி பெண்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்து வந்ததால் தான் சக பெண் போட்டியாளரிடம் அத்துமீறி நடந்துள்ளார். ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பள்ளி பருவம் என்ற டாஸ்கின் போது, சக போட்டியாளரும் மாடலுமான ரேஷ்மாவின் கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டார். இதனால் ரேஷ்மாவின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த காட்சியை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் பொங்கி எழ, பேராசிரியர் ரஜித் குமாரின் இந்த வரம்பு மீறிய செயலால் கடுப்பான மோகன்லால் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றிவிட்டார். போட்டியாளரை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்தி விதிமீறியதால் போட்டியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். மேலும் இவரை போலீசார் கைது செய்தனர்.

 மேலும் செய்திகள்: படவாய்ப்பு தருவதாக குஜால் செய்துவிட்டு கழட்டி விட்ட இயக்குனர்கள்! அடுத்த ஸ்ரீரெட்டியாக மாறிய இலக்கியா!

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும், மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சி செட்டில் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மேலும் மற்றொரு புறம் கொரோன வைரஸும் அதிகம் கேரளாவில் பரவி வருவதால், தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை, தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்த நிகழ்ச்சியை தயாரித்து வரும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

In light of the ongoing global health crisis, we wish for everyone to stay calm and stay safe. #LetsFightCorona

A post shared by Endemol Shine India (@endemolshineind) on Mar 17, 2020 at 10:30am PDT

 

Follow Us:
Download App:
  • android
  • ios