அக்டோபர் 4 ஆம் தேதி அமோகமாக துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்று,பிக்பாஸ் அறிவித்திருக்கும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் முதல் வாரத்தின் முடிவில் போட்டியாளர்கள் முன்னிலையில் தோன்றினார். அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் பிரச்சனை முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதால், அதற்கு நேற்றைய தினம் அமைதியாக தட்டி கொடுத்து புற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் தங்களுடைய வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்ட, அனைவரை பற்றியும் பேசினார். ஆரியை பற்றி பேசும் போது, தன்னுடைய அம்மாவும் நான் ஷூட்டிங்கில் நடித்து கொண்டிருக்கும் போது தான் இறந்தார். நான் வண்டியில் வந்து ஏறிய பின் தான் உண்மையை கூறினார்கள் என கமல் கண் கலங்கியதை அந்த இடத்தில் பார்க்க முடிந்தது.

நிகழ்ச்சியின் முடிவில், ஆரம்பத்தில் அனைவருக்கும் கொடுக்க பட்ட ஹார்ட் மற்றும் ஹார்ட் ப்ரோகென் டாஸ்க் மீண்டும் நடத்த படுகிறது. முதல் ஆளாக வந்த சனம், ஆரம்பத்தில் ஹார்ட் கொடுத்த சம்யுக்தா மற்றும் பாலாஜிக்கு ஹார்ட் ப்ரோகென் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த டாஸ்க் இன்றும் தொடர்கிறது. இதனை கமல் நினைவு படுத்தும் விதத்தில் முதல் புரோமோ இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், அனிதா சம்பத், சுரேஷ் கையில் அழுது கொண்டே ஹார்ட் பிரேக் கொடுக்கிறார். இதை தொடர்ந்து கடந்த முறை, ரேகாவிற்கு ஹார்ட் கொடுத்த சுரேஷ் இந்த முறை ஹார்ட் பிரேக் கொடுத்ததோடு, அவர் இன்னும் தன்னுடைய கோவமான முகத்தை வெளிக்காட்டாமல் உள்ளார் என்றும், மேக்அப் போட்டு போட்டு உள்ளேயே வைத்து கொண்டு நடித்து வருவது போல் பேசியுள்ளார்.

அந்த புரோமோ இதோ...