Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 5 பணிகள்... 8 போட்டியாளர்கள் குறித்து கசிந்த தகவல்..!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை துவங்குவதற்கான ஆயத்த பணிகள் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக 8 போட்டியாளர்களின் பெயர் தற்போது சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. ஆனால் இவர்கள் அதிகார பூர்வமாக கலந்து கொள்ள உள்ளதாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 
 

biggboss season 5 eight contestant name leaked
Author
Chennai, First Published Aug 11, 2021, 10:58 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை துவங்குவதற்கான ஆயத்த பணிகள் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக 8 போட்டியாளர்களின் பெயர் தற்போது சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. ஆனால் இவர்கள் அதிகார பூர்வமாக கலந்து கொள்ள உள்ளதாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், பல பிரபலங்கள் காமெடி நடிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்கள் என பலர் போட்டி போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள். இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மட்டும் இன்றி பிரபலங்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.  பிக்பாஸ் 1,2,3,4 என அடுத்தடுத்து சீசன்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. 

biggboss season 5 eight contestant name leaked

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட்டி, தொட்டி வரை பிரபலம் மட்டுமல்லாது பட வாய்ப்புகளும் குவியும் என்பதால் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். தமிழைப் போலவே மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதாகவே தொடங்கியது. அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும்  14 நாட்கள் பிரபல ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

biggboss season 5 eight contestant name leaked

ஆனால் இந்த முறை பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் கட்டாயம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சபீபத்தில் பிக்பாஸ் புரோமோ சூட் துவங்கி விட்டதாக ஒரு புகைப்படமும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

biggboss season 5 eight contestant name leaked

இதை தொடர்ந்து, பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ள... போட்டியாளர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 8 போட்டியாளர்கள் யார் என்பது தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள் யார் யார் என்பது வெளியே கசிந்துள்ளது. அந்த வகையில்... பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகீலாவின் மகள் மீலா, நடிகை ஐஸ்வர்யா, ஜிபி முத்து, நடிகர் ஜான் விஜய், ப்ரதாயினி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


 

Follow Us:
Download App:
  • android
  • ios