பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு. காரணம் வெள்ளித்திரையில், சின்னத்திரையிலும் பார்த்த பிரபலங்கள், உண்மையாக எப்படி நடந்து கொள்வார்கள், அவர்களுடைய குணாதிசயம் என்ன? என்பதை இந்த நிகழ்ச்சி அப்பட்டமாக காட்டிவிடும்.

ஹிந்தியில் முதலில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, கடந்த ஓரிரு வருடங்களாக, அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில், தமிழில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரை தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமலஹாசன் தான். கடந்த வருடம் சீசன் 3 முடிவடைந்த நிலையில், நான்காவது சீசன் செப்டம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியையும் இவரே தொகுத்து வழங்குவார் என்பது பலரது எதிர்பார்ப்பு.

இது ஒருபுறம் இருக்க... தெலுங்கில், ஜூன் மாதமே பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். அவரை தொடர்ந்து இரண்டாவது சீசனை, நடிகர் நானியும், மூன்றாவது சீசனை நாகர்ஜூனாவும் தொகுத்து வழங்கினர்.

இவர்களை தொடர்ந்து, நான்காவது சீசனை நடிகர் மகேஷ் பாபு தொகுத்து வழங்க உள்ளதாக ஒரு செய்து வெளியாகியுள்ளது. கண்டிப்பாக  4 வது சீசன் தொகுப்பாளர் மாற்றப்படுவார் என கூறப்படும் நிலையில், அவர் யார் என்கிற தகவல், நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது மட்டுமே அதிகார பூர்வமாக தெரியவரும்.