நேற்றைய தினம் முதல் முறையால் உலக நாயகனின் பிறந்தநாள் பிக்பாஸ் செட்டில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதில் உலக நாயகனே எதிர்பாராத அளவிற்க்கு, அவரது குடும்பத்தினர் மகள்கள், ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என அனைவரும் திரை மூலம் தோன்றி கமலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதையும் தாண்டி, பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடுவே, திரை மூலம் தோன்றி அவருக்கு வாழ்த்து கூறியது பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை அரங்கேறிடாத ஒரு சம்பவமாகவே பார்க்கப்பட்டது.

ஒரே திரையில் கமல்ஹாசன், நாகார்ஜூனா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும் இருக்கும் இந்த கண்கொள்ளா காட்சியை இன்று இரு மாநில ரசிகர்களும் ரசிக்கலாம். கமல்ஹாசனுக்கு நாகார்ஜுனா பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகளும், தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும் காட்சிகளும் இடம்பெற்றது.

அதே போல் பிறந்தநாள் ஸ்பெஷலாக, கமல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் ஒருவரின் பெயரையும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தொடர்ந்து, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும், நடிகர் மோகன் லாலும் திரை மூலம் தோன்றி கமலஹாசனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.