samyuktha: குத்துக்கு பத்து.... சர்ச்சைக்குரிய இயக்குனருடன் கூட்டணி அமைத்த பிக்பாஸ் சம்யுக்தா
7 எபிசோடுகளை கொண்ட ‘குத்துக்கு பத்து’ வெப்தொடரில் சம்யுக்தாவுடன் ஆடுகளம் நரேன், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு சினிமாவில் பரவலாக வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சம்யுக்தா தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த சம்யுக்தா, தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். ‘குத்துக்கு பத்து’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை டெம்பிள் மங்கி என்கிற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் வரதராஜ் இயக்கி உள்ளார்.
இவர் ஏற்கனவே ‘பல்லுபடமா பாத்துக்கோ’ என்கிற அடல்ட் கண்டெட் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. 7 எபிசோடுகளை கொண்ட இந்த வெப்தொடரில் சம்யுக்தாவுடன் ஆடுகளம் நரேன், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த வெப் தொடருக்கு பாலமுரளி பாலா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இயக்குனர் விஜய் வரதராஜ், ‘பல்லுபடமா பாத்துக்கோ’ என்கிற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கி உள்ளதால், இந்த தொடரும் அதே பாணியில் இருக்கும் என கூறப்படுகிறது. ‘குத்துக்கு பத்து’ வெப் தொடரின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.