உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய கடைசி மூன்று பிக்பாஸ் சீசன்கள் நல்ல படியாக முடிவடைந்த நிலையில், நாளை முதல் 4 ஆவது சீசன் துவங்க உள்ளது. இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி, நிகழ்ச்சியாளர் தரப்பில் இருந்து ரகசியம் காத்து வருவதால், தினம் தோறும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்பதற்காக அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி  ஆகியோர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை காயத்ரி  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என எதிர்பார்த்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்பதை ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதத்தில் பிக்பாஸ் சீசன் 4 புதிய புரோமோ வெளியாகியுள்ளது. "இதில் கமல் எல்லா கதைகளுக்கும் இரு பக்கம் உள்ளது". இருவர் சொல்வதும் உண்மை வெல்வதும் என கூறுகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது என்பதையும் தெரிவிக்கிறார். இந்த புரோமோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.