'பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வருபவர் நடிகர் கவின்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் காதல் மன்னன் என்றும் இவருக்கு ஒரு பெயர் உள்ளது. இந்த பெயருக்கு ஏற்ற போல்... தற்போது இவரும் - இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவின் காதல் காட்சிகளும் தான் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் காதல் காட்சிகள், நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், நடிகர் கவின் தற்போது தன்னுடைய அம்மாவை பார்க்க வெளியேறியே தீருவேன் என அடம் பிடித்து வருவதாக, ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கவினின் தாயார், ராஜலட்சுமி சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததற்கான வழக்கு, நேற்று திருச்சி நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்த ஏலச்சீட்டு மோசடியில் கவின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் சம்மந்தப்பட்டிருந்தனர்.  

அதாவது கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை, திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த தமயந்தி, அவருடைய மகள் ராஜலக்ஷ்மி, தமயந்தி மருமகள் ராணி,  தமயந்தியின் கணவன் அருணகிரி, மற்றும் மகன் சோழராஜன் ஆகியோர் தொடர்ந்து அந்த பகுதியில் சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர்.

இதில் மொத்தம் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.  இவர்களுக்கு கொடுக்க வேண்டிய 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தராமல், குடும்பத்தோடு ஏமாற்றியுள்ளனர். இவர்கள் ஏமாற்றிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என 2007ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றவியல் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில்,  இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால்,  தமயந்தி ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  சீட்டு நிறுவனங்கள் சட்டத்தின்படி 2 வருட சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.  இந்த மூன்று பெண்களில் கவினின் தாயார் ராஜலட்சுமியும் ஒருவர். 

இந்த விஷயம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினுக்கு தெரியவரவே,  அவர் உடனடியாக தன்னுடைய அம்மாவை பார்த்தே தீர வேண்டும் என நிகழ்ச்சியை விட்டு வெளியேறியே தீருவேன் என  அடம்பிடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ள கவின் வெளியேற வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகிறது.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் முதல் வாரத்திலேயே தன்னுடைய வாழ்க்கையில், ஒரு சில பிரச்சனைகள் இருந்ததாகவும் அம்மா, அப்பா அனைவரும் நண்பர்கள் வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் தன்னுடைய குடும்பத்தில் இருந்த பிரச்சினை பற்றி அவ்வபோது பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.