கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி, 'பிக்பாஸ் சீசன் 3'. இந்த நிகழ்ச்சியில், சினிமாவில் சாதிக்க துடிப்பவர்கள், மக்கள் மனதில் இடம் பிடிக்க துடிப்பவர்கள் என ஓவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பங்கேற்றனர். மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

கிட்ட தட்ட 65 நாட்களை கடந்து விட்ட நிகழ்ச்சியில், இப்போது ஷெரின், சேரன், லாஸ்லியா, கவின், சாண்டி, வனிதா, தர்ஷன், முகேன் ஆகியோர் இறுதி போட்டிக்கு செல்ல மும்முரமாக விளையாடி வருகிறார்கள்.

மேலும், போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், கவின் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன், லாஸ்லியாவிடம்... கடந்த மூன்று வருடத்திற்கு முன், தனக்கு ஒரு காதலி இருந்ததாக தெரிவித்தார்.

 

இதை கூறியபின், லாஸ்லியாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மக்களை ஆச்சர்யப்படுத்தினார்.

இந்நிலையில், கவினின் முன்னாள் காதலி தற்போது தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்து, வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவரான பிரியா பவானி ஷங்கர் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து நடிகை பிரியா பவானி ஷங்கர் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை.

மூன்று வருடத்திற்கு முன்பே இவர்களுடைய காதல் பிரிந்துவிட்ட நிலையில், தற்போது பிரியா பவானி ஷங்கர் ராஜ்வேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியானது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என பிரியா பவானி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.