இன்று நர்ஸுகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நானும் நர்ஸ் தான்.... நானும் நர்ஸ் தான்.. என முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன பிக்பாஸ் ஜூலியை வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அவரை மக்கள் பெருமையாக பார்த்தார்கள். 

உள்ளே சென்று, இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில விஷம காரியங்கள் மற்றும் அவர் கூறிய அடுக்கடுக்கான பொய், இவர் மீது வெறுப்பை வரவழைத்தது.  அதனால் பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாது, தமிழக ரசிகர்களிடம் ஜூலிக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சியது. அப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மெயின் கன்டன்ட்டாக இருந்தவர் ஜூலி தான். 

உள்ளே செல்லும் போது இவருக்கு இருந்த கை தட்டல்கள் வெளியில் வரும் போது இல்லை. மேலும் வெளியே வந்த சில நாள் அமைதியாக இருந்த ஜூலி, நிகழ்ச்சி தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார். பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். 

இவர் ஹீரோயினாக நடித்த ஒரு படம் கூட இன்னும் வெளியாக வில்லை என்றாலும், தான் ஒரு செலிபிரிட்டி என்று மட்டுமே கூறிக்கொண்டார். நடிக்க துவங்கியதால் தன்னுடைய நர்ஸ் வேலையை தூக்கி போட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் இன்று, நர்ஸ் தினத்திற்காக தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை தூசு தட்டி எடுத்து, அதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இன்டர்நேஷனல் நர்ஸ் தின வாழ்த்துக்களை கூறினார். இவர் இப்படி ஒரு பதிவை போடுவார் என எதிர்பார்த்தது போல் சில நெட்டிசன்கள் தாறுமாறாக இவரை விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக,  நீதான் நர்ஸ் இல்லையே.  நீங்க செலபேரிட்டினு பீத்திக்கிட்டு இருக்கீங்க பின் ஏன் வாழ்த்து சொல்லணும் என வச்சி செய்து வருகிறார்கள்.