பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் யார் வெளியே செல்வார் என்கிற பரபரப்பு, அணைத்து பிக்பாஸ் ரசிகர்கள் மனதிலும் இருந்த நிலையில், ஆஜித் மிக குறைவான வாக்குகளுடன் எவிக்ஷன் செய்யப்பட்டார். அதே நேரத்தில், அவர் எவிக்ஷன் ஃபிரீ பாஸை கையில் வைத்திருந்ததால், இந்த வாரம் தன்னை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றி கொண்டார்.

எனவே மற்ற போட்டியாளர்களுக்கு இருந்ததை விட, ஆஜித்துக்கு இருந்த கூடுதல் பவர் நேற்றுடன் முடிவுக்கு வந்து விட்டது. மற்ற போட்டியாளர்களும் இதை தான் எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள், நவராத்திரியை சிறப்புக்கும் விதமாக இதுவரை இல்லாத புதிய டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளனர். குறிப்பாக இன்றைய நிகழ்ச்சி இடைவிடாமல் 6 :30 ,மணி முதல் 9 :30 மணிவரை தொடர்ந்து நான்கு மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது.

போட்டியாளர்களுக்கு வித்தியாசமான விளையாட்டுடன், நவராத்திரி பூஜை, கொலு, விதவிதமான உணவு வகைகள் என அசத்துகிறார்கள் போட்டியாளர்கள். இது குறித்து தான் இன்றைய முதல் புரோமோவில் வெளியாகியுள்ளது.

’பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பிக்பாஸ் தமிழ் சீசன் நான்கில் நவராத்திரி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது என்று அனிதா செய்தி வாசிப்பது போல் கூறினார். இதில் குறுக்கிட்ட ரியோ, ‘நான்கு மணி நேரம் இடைவெளி இன்றி கொண்டாட்டம்’ என தவறை திருத்த அதற்கு சாரி என்று கூறி அனிதா செய்தி வாசிப்பை மேலும் தொடர்கிறார். போட்டியாளர்களுக்கு கொண்டாட்டம் கலை கட்டினாலும் இன்றைய தினம் கமல் கலந்து கொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புரோமோ இதோ