பிக்பாஸ் வீட்டில் தற்போது பந்து பிடிக்கும் டாஸ்க் நடந்து வருகிறது. அதிக பந்துகளை சேகரிக்க வேண்டும் என ஆரி, ரியோ, பாலா, சோம் என ஒவ்வொரு அணியை சேர்ந்தவர்களும் போட்டி போட்டு விளையாடி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய முதல் புரோமோவில், இந்த பால் கேட்ச் டாக்ஸ்க்கில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்து, தனி தனியாக போட்டியாளர்கள் தங்களுடைய டாஸ்கை மேற்கொள்ளுவது தான்  வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆரி படிக்கும் போது, மூன்றாம் தகுதி... உங்கள் எல்லோருக்கும் மிக பெரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தனித்தனியாக போட்டியை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்மா டிவியில் ஹவுஸ் மேட்ஸ் பெயர் வரும் போது அவர்களுக்கான பந்து, கார்டன் ஏரியாவில் வந்து விழும் அதனை போட்டியாளர்கள் தவறவிடாமல் பிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

போட்டியாளர்களும், தங்கள் பெயர் வந்த பின் அடித்து பிடித்து ஓடும் காட்சி இடம்பெறுகிறது. குறிப்பாக சோம் இரண்டு பந்துகளை பிடித்த பின்னரும், ரம்யா தனக்கான பந்து வரவில்லை என புலம்புவது தற்போதைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்த புரோமோ இதோ...