Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் கணேஷ் வெங்கட் ராம் குடும்பத்தில் நேர்ந்த சோகம்..! ஈடு செய்யமுடியாத இழப்பு என குமுறும் நிஷா..!

பிரபல டிவி சீரியல் நடிகை நிஷா தனது பாட்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார் என்றும் அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
 

biggboss ganesh venkatram wife nisha grandmother pass away
Author
Chennai, First Published Jun 15, 2021, 11:11 AM IST

பிரபல டிவி சீரியல் நடிகை நிஷா தனது பாட்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார் என்றும் அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

'அபியும் நானும்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட் ராம். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், இவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. இதை தொடர்ந்து, 'உன்னைப்போல் ஒருவன்', 'கோ', 'பனித்துளி' , 'தீயா வேலை செய்யணும் குமாரு' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும், இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகியது என்றால் அது பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி தான். 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த இவர், மூன்றாவது இடத்தை பிடித்தார்.

biggboss ganesh venkatram wife nisha grandmother pass away

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பலர் ஆச்சர்யப்படும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் நிஷா தங்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட ஈடு செய்யமுடியாத இழப்பை பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார்.

biggboss ganesh venkatram wife nisha grandmother pass away

சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நிஷா, தன்னுடைய பாட்டி, கமலா... உடல்நல குறைவு  காரணமாக உயிரிழந்துள்ளது பற்றி பெற்றுவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "என் வாழ்வில் ஈடு இணை இல்லாத ஒருவரை நான் இழந்துவிட்டேன். என்னுடைய கமலா பாட்டி நன்றாக சமைப்பவர், எப்போதும் உறுதுணையாக இருப்பவர், என்னக்கு ஒரு  நல்ல ஆசிரியர், சிறந்த தோழி. உங்கள் இழப்பை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து பலர் தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios