பிக்பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் இதில் வைக்கப்படும் டாஸ்குகளும் முந்தய சீசனை விட மிகவும் வித்தியாசமாக உள்ளது.

அந்த வகையில், நேற்று துவங்கிய நாடா அல்ல காடா டாஸ்க் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. போட்டியாளர்களின் ஒரு தரப்பினர், சொர்க்கபுரி அரச குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும், மற்றொருவர் அரக்க குடும்பத்தை சேர்ந்தவராகவும் பிரிந்து இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.

நேற்று அரக்க குடும்பமாய் இருந்தவர்கள் இன்று நாட்டை ஆளும் ராஜ குடும்பமாக மாறுகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், நாட்டை நான் காப்பாற்றுகிறேன் என இளவரசன் வேடமிட்டுள்ள ஆரி செல்கிறார். அவரை சிரிக்க வைப்பதற்காக சிலர் ஆரஞ்சி தோல்களை கூட அவர் மூக்கின் அருகே பிழிந்து அவரை அசைய வைக்கிறார்கள்.

இவர்களில் செயலால் கடுப்பான, ஆரி இப்படி விளையாட நீங்கள் வேறு ஏதாவது செய்யலாம் என திட்டுகிறார். அமைதியாகவே இருந்த ஆரி நேற்றய தினம் கூட பாலாஜியிடம் மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...