பரபரப்புக்காகவும், பார்வையாளர்களை அதிகப்படுத்தவும் அவ்வப்போது வில்லங்கமான சில விஷயங்களை பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் சரயுராய்.
தெலுங்கில் கர்பூல், 3 ரோசஸ், தொல்லி பரிச்சயம் உள்ளபட பல படங்களில் நடித்துள்ளவர் சரயுராய் (sarayu roy). இவர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சிக்கு பின் எதிர்பார்த்த பட வாய்ப்பு கிடைக்காததால் சமூக வலைத்தளத்தில் பிசியாக இயங்கி வருகிறார் சரயுராய்.
மேலும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த சேனலில் பரபரப்புக்காகவும், பார்வையாளர்களை அதிகப்படுத்தவும் அவ்வப்போது வில்லங்கமான சில விஷயங்களையும் பேசுவார் சரயுராய் (sarayu roy). அந்த வகையில் சமீபத்தில் இந்துக் கடவுள்களையும், கடவுளை வணங்குபவர்களையும் மிகவும் மோசமாக கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர்மீது பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக தெலங்கானா விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஐப்புரி அசோக் என்பவர் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள காலவ்நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து போலீசார் சரயுராயை (sarayu roy) கைது செய்ததோடு அவர் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
