பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் இன்றைய தினத்தின் முதல் டாஸ்க்கே சற்று வித்தியாசமாக இருந்ததை நாம் பார்த்தோம். இது நாள் வரை, உள்ளே நடந்த சம்பவங்களை வைத்து, யார் அடுத்த வாரம் வெளியேறும் போட்டியாளர் என்பதை பிக்பாஸ் அவர்களேயே வரிசை படுத்த கூறினார்.

இதை தொடர்ந்து இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், நிஷா, சோம், அர்ச்சனா உள்ளிட்டோர் பாலா அதிக கோவப்படுவதாக கூறி அவரது பெயரை கூறுகிறார்கள். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலாவும் எழுந்து, கோவப்பட்டதான் மனுஷன் என்பது போல் டயலாக் எல்லாம் கூறுகிறார்.

பின்னர், பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து... பஞ்சாயத்து என்று வந்து விட்டால், நடுவர் வேலை பார்க்கும் அர்ச்சனா இந்த பிரச்னையிலும் தலையிட்டு தன்னுடைய நாட்டாமை தனத்தை காட்டுகிறார்.

இது ஏதோ டாஸ்க் போல் தெரிகிறது, காரணம் அர்ச்சனா மாஸ்க் போட்ட முகம் ஒருவருக்கு, மாஸ்க் போடாத முகம் மற்றொருவருக்கு என கூறும் போது நிஷா மற்றும் ரியோவின் முகங்கள் காட்டப்படுகிறது. இன்று என்ன நடக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ: