பல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று மிக பிரமாண்டமாக துவங்கியது. உலக நாயகன் கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு  முன்  வழக்கம் போல், பிக்பாஸ் போட்டியாளர்கள் 105 நாட்கள் தங்க உள்ள வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காட்டினார். கடந்த 3 சீசன்களை விட இந்த முறை மிகவும் கலர் ஃபுல்லாக வடிவமைத்துள்ளனர் நிகழ்ச்சியாளர்கள்.

பின்னர் தன்னுடைய உயிரையே மையமாக வைத்து கொரோனா பணியில் ஈடுபட்டு வரும், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மற்றும் கொரோனவால் உயிரிழந்த போலீசார் என அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்த பின் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி துவங்கியது.

இதுவரை இல்லாதபடி, இந்த முறை பார்வையாளர்கள் அனைவரும்... ஆன்லைன் மூலம் நிகழ்ச்சியை பார்க்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 16 போட்டியாளர்கள் யார் யார் என்பதை உலக நாயகன் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதே நிகழ்ச்சியில் கமல் ஹாசன் விஜய் டிவியின் புதிய உதயமான விஜய் மியூசிக் தொலைக்காட்சியையும் துவங்கி வைத்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தங்களுடைய முதல் நாளை கழிக்க உள்ள போட்டியாளர்கள்... ஆரம்பமே அசத்தல் என்பது போல், தளபதி விஜய்யின் 'வாத்தி கம்மிங்' பாடலுடன் கண் விழித்துள்ளனர். அணைத்து போட்டியாளர்களும், தளபதியின் பாடலுக்கு செம்ம குத்து குத்துவது போல் ஒரு புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ...