கமல்ஹாசன் பிக்பாஸ் செட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் போது, பிக்பாஸ் குரல்... இந்த இனிய நாளில் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவிக்கிறார். பின்னர் செம்ம மாஸாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் கமல்.

ஹாப்பி பர்த் டே கமல் சார் என கூறிய பிக்பாஸ், கமலிடம் ட்ரீட் கேட்கிறார். நான் அனைவரையும் சமமாகவும் அவர்களுக்கு மரியாதையும் கொடுத்து தான் ட்ரீட் செய்கிறேன். அதையே நானும் எதிர்பார்க்கிறேன் என, பிக்பாஸிடம் கூறுகிறார் கமல். பாவம் கமலிடம் இருந்து கண்டிப்பாக பிக்பாஸ் இந்த பதிலை எதிர்பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே.

பின்னர் அகம் டிவி வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் கமலுக்கு போட்டியாளர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி, தங்களது அன்பை வெளிப்படுத்துகிறார்கள். கமலும் லவ் யூ ஆல் என கூறி, வழக்கம் போல் இந்த வாரம் அரங்கேறிய பிரச்சனைகள் பற்றி பேச துவங்குவர் என தெரிகிறது.

அதே நேரத்தில் இந்த வாரம், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல உள்ள நபர் யார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.