பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் பிரபலமான தாமரைச் செல்விக்கு தற்போது மேலும் ஒரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி வழங்கி உள்ளதாம்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் தாமரைச் செல்வி. நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேட் ஆன தாமரைச் செல்விக்கு, தற்போது ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வாய்ப்பையும் கொடுத்துள்ளது விஜய் டிவி தான். விரைவில் ஆரம்பமாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக தாமரையை களமிறக்க உள்ளார்களாம். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சமைத்து போட்டது தாமரை தான். இதைப் போட்டியாளர்களே பல்வேறு இடங்களில் சொல்லி இருந்தனர்.

குக் வித் கோமாளியும், சமையல் நிகழ்ச்சி என்பதால், தாமரை இதற்கு பொருத்தமாக இருப்பார் எனக்கருதி அவரை களமிறக்கி உள்ளனர். பிக்பாஸில் மிஸ் பண்ண டைட்டிலை, குக் வித் கோமாளி மூலம் தட்டித் தூக்கும் முனைப்புடன் தாமரை களமிறங்க உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ‘சமையல்ல தான் அவுங்க ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே... அப்போ கப்பு கன்பார்ம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி, இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமே கோமாளிகள் தான், அதன்படி புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி ஆகியோர் கோமாளிகளாக இரண்டு சீசன்களிலும் கலக்கினர். இந்த சீசனிலும் அவர்களே தொடர வாய்ப்புள்ளது. பிக்பாஸ் சீசன் 5 முடிந்தவுடன் குக் வித் கோமாளி 3-வது சீசன் தொடங்க உள்ளது.