Bigg boss winner Aarav open talk about oviyaa Love

ஹிந்தியில் ஹிட் அடித்த பிக் பாஸ், தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி சக்க போடு போட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் வயப்பட்டதால் நிகழ்ச்சி சூடு பிடித்தது. இந்த நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சியின் டி.ஆர்.பி எகிறியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஓவியாவின் காதலை ஏற்க மருத்துவந்தார் ஆரவ். ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சியை மேற்கொண்டதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா. வெளியே வந்த ஓவியா ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பை தெரிந்து கொண்டார். அதன் பிறகும் ஆரவ் மீதான காதலை விடவில்லை சில நாட்களில் ட்விட்டரிலும் சிங்கிள் என ஸ்டேட்டஸை மாற்றினார். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நூறாவது நாளில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவ் வெளியே வந்தார். மிகச்சிறப்பாக தான் பிக் பாஸால் பெற்ற பிரபலத்தன்மையை பயன் படுத்துகிறார் என்றே குறிப்பிட வேண்டும்.

இதனையடுத்து நேற்று தொலைகாட்சி பேட்டி, வானொலி முகநூல், டிவிட்டர் என பேட்டி கொடுப்பதிலும், ஸ்டேட்டஸ் போடுவதிலும் படு பிஸியாக இயங்கி வருகிறார். அப்போ அப்போ ஓவியா தன் மீது கொண்டுள்ள காதலிற்கு தவறாமல் பதில் அளித்து வருகிறார்.

அவர் பேசுவதை வைத்து பார்க்கும் பொழுது நிச்சயம் ஆரவ் ஒவியாவின் காதலை கண்டு அச்சப்படுகிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. ஓவியாவோடு ரீல் ஹீரோவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.

நிஜத்தில் அவரோடு நான் இணைய வாய்ப்பில்லை. ஓவியாவின் காதல் அல்ல, நான் யாருடைய காதலை ஏற்கும் மனநிலையில் இல்லை நான் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் இது மட்டுமே என் கண்ணிற்கு இப்போது தெரிகிறது என்றார்.