வனிதா காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடலுக்காக வேடமிட்டு மேக்கப்புடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வனிதாவுக்கு, தற்போது பட வாய்ப்பு குவிந்து வருகிறது. ஏராளமான படங்களில் நடித்து வரும் இவர், தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

மீண்டும் திரையுலகிலும், சின்னத்திரையுலும் பிஸியாகியுள்ள வனிதா, அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவதால், தன்னுடைய புது புது ஃபேஷன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பிக்பாஸ்சை மறக்காமல், தன்னுடைய கழுத்தின் BB கண் வடிவிலான பென்டென்ட் ஒன்றை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்..

இதற்கிடையே பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதா சில நாட்களிலேயே அவரை பிரிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத வனிதா தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், பிரஷாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் டிராப் உள்ளிடட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வனிதா காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடலுக்காக வேடமிட்டு மேக்கப்புடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

View post on Instagram