Asianet News TamilAsianet News Tamil

Anitha: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னை வெற்றியாளராக கருதிய அனிதா வெளியேறினார்...ஷாக்கில் ரசிகர்கள்!

Eliminated anitha: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து,  இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருந்து குறைந்த வாக்குகள் பெற்று, அனிதா வெளியேறியுள்ளார்.

Bigg boss ultimate this week elimination anitha
Author
Chennai, First Published Mar 20, 2022, 11:04 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நெதர்லாந் நாட்டின் 'பிக் பிரதர்' நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. 

தற்போது, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.  

Bigg boss ultimate this week elimination anitha

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இதையடுத்து, 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சியை ஜனவரி மாதம் 14 போட்டியாளர்களுடன் அறிமுகப்படுத்தினர். இதில், கடந்த 5 சீசன்களிலும் போட்டிபோட்ட முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். 

Bigg boss ultimate this week elimination anitha

ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு:

இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது.பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

Bigg boss ultimate this week elimination anitha

சிம்பு வந்த பின்:

பணி சுமை காரணமாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசன் வெளியேறிய பிறகு, நான்காம் வாரம் முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  அவர் நிகழ்ச்சி வர ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சம் விறுவிறுப்பாக தான் நிகழ்ச்சி செல்கிறது.

Bigg boss ultimate this week elimination anitha

 இந்த வார எலிமினேஷன்:

ஒவ்வொரு வாரமும், யாராவது ஒரு போட்டியார் வெளியேறி ஆக வேண்டும். அந்த வரிசையில்,இந்த வாரம் கலக்க போவது யாரு சதீஸ் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெளியேறுவார் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்த வாரம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று, அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறியுள்ளார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தன்னை முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட அனிதா, எலிமினேட் ஆகியுள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க ...Election result: நடிகர் சங்க தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை! விஷால் அணியா? பாக்யராஜ் அணியா? வெற்றி யாருக்கு

Follow Us:
Download App:
  • android
  • ios