Asianet News TamilAsianet News Tamil

Election result: நடிகர் சங்க தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை! விஷால் அணியா? பாக்யராஜ் அணியா? வெற்றி யாருக்கு

Union election result: 2019 இல் ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, சென்னையில் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் இன்று எண்ணப்படுகிறது.

SIIFAA South Indian film artists voting happens today
Author
Chennai, First Published Mar 20, 2022, 9:52 AM IST

2019 இல் ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, சென்னையில் இன்று ஓய்வு பெற்றநீதிபதி பத்மநாபன முன்னிலையில் இன்று எண்ணப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்று ஒன்று சென்னையில் உள்ளது. முன்னதாக, கடந்த 2015 இம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத்திற்கு தேர்தல் விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

SIIFAA South Indian film artists voting happens today

தலைவராக மூன்று முறை இருந்த சரத்குமார்:

இதையடுத்து, நடிகர் சங்கத்தில் தலைவராக மூன்று முறை இருந்த சரத்குமாரும் செயலாளராக இருந்த ராதாரவியும் நடிகர் சங்க இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்ட நிலையில், இதனை எதிர்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற குற்றசாட்டை முன் வைத்து விஷால் அணி வாக்குவாதம் செய்தது.

தேர்தலில் விஷால் அணி களமிறங்கியது:

இருவருக்கும் இடையே சண்டை  உச்சத்திற்கு சென்றது. இதையடுத்து கடந்த, 2015ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கியது. விஷால் செயலாளராகவும், நாசர் தலைவியாராகவும், கார்த்தி பொருளாளராகவும், கருணாஸ், பொன்வண்ணன் துணை தலைவர்களாகவும் போட்டியிட்டனர்.

SIIFAA South Indian film artists voting happens today

மோதலின் உச்சத்தில் தேர்தல் களம்:

போட்டியுடன் நிறுத்தாமல், வார்த்தை மோதல்கள் உச்சத்தை எட்டி இருந்தது. மாறி மாறி இரு அணியும் சண்டையிட்டு கொண்டனர். ராதாரவி தரப்பில் சிம்பு களமிறக்கப்பட்டவுடன் தேர்தல் களம் சூடு பிடித்தது. ஏறத்தாழ ஒரு பொது தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

 2015 தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் அணி :

வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்க தேர்தல் தமிழக சினிமா களத்தில் முக்கிய கவனம் பெற 2015 தேர்தல் முக்கிய காரணமாக மாறியது. தேர்தலில் நேரடி மற்றும் தபால் முறை ஓட்டு நடைபெற்றது. துணை நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை ஒரே இடத்தில் பிரபலங்கள் கூடியிருந்ததால் தேர்தல் களமே திருவிழா கோலம் பூண்டது.  இறுதியில், இந்த தேர்தலில் விஷால் அணி அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்று நாசர் தலைமையில் விஷால் செயலாளராக பதவி ஏற்றது.

SIIFAA South Indian film artists voting happens today

இரண்டாவது முறையாக தேர்தல்:

2015 தேர்தலின் செயற்குழு பதவிக்காலம்  முடிவடைந்த நிலையில், இரண்டாவது முறையாக 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல்  2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. இந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி, மற்றும் பாக்கியராஜ் தலைமையிலான மற்றோரு அணி போட்டியிட்டது. இதையடுத்து, பதிவான வாக்குகள், சீலிடப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு, நுங்கம்பாக்கம் தனியார் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. 

இன்று வாக்கு எண்ணி,..வெற்றி  யார் பக்கம்?

 இந்நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு விரைவில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மீண்டும் விஷால் அணி வெற்றி பெறுமா அல்லது விஷால் அணிக்கு எதிராக களமிறங்கிய பாக்யராஜ் அணி வெற்றி பெறுமா என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...Yashika aannand hot: இடுப்பு தெரிய கும்முனு இருக்கும் போஸ் கொடுத்து....இளசுகளை கம்முன்னு ஆக்கிய யாஷிகா..!

Follow Us:
Download App:
  • android
  • ios