பிக் பாஸ் அல்டிமேட்டில் டாஸ்க்கிற்காக ஒரு டாய்லட்டை தவிர மற்றவை பூட்டப்பட்டுள்ளது.. இதனால் கடுப்பான பாலா திறக்க கூறி சண்டையிட..நிரூப் திறந்ததற்காக சண்டையிடுகிறார்.. 

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் (BiggBoss) கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் (Raju) டைட்டில் வின்னர்களாகினர். சமீப காலமாக ஓடிடி தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால் அதில் படங்களை நேரடியாக வெளியிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்றி, ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த 3 வாரங்களாக கமல் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் அரசியல் பணிகள் மற்றும் சினிமா ஷூட்டிங் இருப்பதால் தற்காலிகமாக இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அவருக்கு பதில் நடிகர் சிம்பு (Simbu) தொகுத்து வழங்கி வருகிறார். 

முன்னதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக விஜய் டிவி 'கலக்க போவது யாரு' புகழ் சதீஷ் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த வாரம் டாஸ்காக கிராமத்து கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது..அதில் ஒரு டாய்லெட்டை தவிர மற்றவை பூட்டப்படுகிறது..அந்த ஒரு டாய்லட்டையும் நிரூப்..சினேகன் காவல் காத்துக்கொண்டிருக்கின்றனர்...பின்னர் மற்றோரு டாய்லெட்டை திறந்துவிடுமாறு பாலாஜி முருகதாஸ் முறையிட்டு சாதித்து கொள்கிறார்..இதனால் கடுப்பான நிரூப் ..பிக்பாஸிடம் சண்டையிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது..