Bigg Boss Tamil episode 3 Jallikattu girl Juliana is singled out and targeted
இந்தியில் சல்மானின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதையே தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்குகிறார் உலகநாயகன். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பான முதல் நாளிலிருந்து சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக இருந்து வருகிறது. 15 பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில்
நேற்று நாமினேஷன் ரவுண்ட் நடைபெற உள்ளது இதற்கு முன்பு இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்களை சொல்கிறார்கள். அதிக பங்கேற்பாளர்கள் மெரினா ஜூலி என்ற பெயரையே சொல்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் புகழ்பெற்றவர் ஜூலியானா என்ற ஜூலி. செவிலியரான இவர், பிக் பாஸில் பங்கேற்றுள்ளார். சக பங்கேற்பாளர் நடிகை ஆர்த்திக்கும் இவருக்கும் படுக்கை சண்டையில் ஆரம்பித்து, கட்டிப்பிடிக்க ஆளே இல்லை, ஜல்லிக்கட்டு கோஷம் வரை ஜூலியை ரவுண்டு கட்டி வார்த்தெடுக்கிறார்கள்.
.jpg)
நேற்று மூன்றாவது நாள் யாரை வெளியேற்ற நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்கப்பட்டது. நிறைய பேர் நடிகர் ஸ்ரீயைச் சொன்னார்கள். அவர் ஆரம்பம் முதலே இந்த நிகழ்ச்சியில் ஈடுபாடில்லாமல் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அடுத்தது நிறைய பேர் சொன்னது ஜூலியை. பிக் பாஸ் குடும்பத் தலைவனான சினேகன் சொன்னபோது 'ஜூலி எல்லோரையும் அதிகமாக பேசுகிறார். எதையும் முறையாக கேட்பதில்லை’ என்று சொல்லி அவரை நாமினேட் செய்ய வேண்டும் என்றார்.
அவரது கருத்தையே பெரும்பாலானோர் பிக் பாஸிடம் கன்சோல் ரூமில் கூறினார்கள். மாறாக ஜூலி, கணேஷ் வெங்கட்ராமிடம் கதறி அழுது தனது ஆதங்கத்தை புலம்பி தீர்த்தார். ‘நான் ஜெயிக்கக் கூடாது என்று அனைவரும் இவ்வாறு செய்கிறார்கள்’ என்று கதறியுள்ளார். கஞ்சா கருப்பையும், அனுயாவையும்கூட சிலர் நாமினேட் செய்வதாக சொன்னார்கள்.
.jpg)
இன்னும் 98 நாட்களுக்குள் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் காத்து கிடக்கின்றனர் பார்வையாளர்கள். இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் ரேட்டிங்கை ஏற்றுவதற்கு பல எதிர்பார்ப்புகளை, பரபரப்புகளை உருவாக்குவார்கள் என்பது நிச்சயம்...
ஆக பிக் பாஸின் ரேட்டிங்கை எகிறவைக்க சிக்கிய முதல் பலி ஆடு நம்ம மெரினா பொண்ணு ஜூலியா?
