Asianet News TamilAsianet News Tamil

எகிறும் ஹாட்பீட்.. நாளுக்கு நாள் லட்சங்களை ஏற்றும் பிக் பாஸ்.. கான்பிடன்டை இழக்கிறார்களா ஹவுஸ்மேட்ஸ்?

டிக்கெட் பினாலேவில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றிருந்தாலும் தனக்கு முதலிடத்தை பிடிப்பேன்  என்கிற நம்பிக்கை இல்லை எனவே இந்த பணத்துடன் தான் வெளியேற உள்ளதாக அமீர் குறிப்பிடுகிறார்.

Bigg Boss tamil 5 Promo...
Author
Chennai, First Published Jan 6, 2022, 1:43 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இதில் அமீர் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மீதமுள்ள ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, நிரூப், பாவனி ஆகிய ஆறு பேரில் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

Bigg Boss tamil 5 Promo...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பரிசை வெல்பவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும். மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பரிசும் கிடைக்காது. ஆனால் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்த பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு பணப்பெட்டி அனுப்பப்படும், அதில் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்பவர்கள் அந்த தொகையுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

இதுவரை நடந்த 4 சீசன்களில் கவின் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் மட்டுமே இவ்வாறு வெளியேறி உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் இன்று அந்த பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெட்டி மட்டுமே அனுப்பப்படும், ஆனால் இந்த முறை பெட்டியுடன் நடிகர் சரத்குமாரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

Bigg Boss tamil 5 Promo...

சிறிது நேரம் போட்டியாளர்களுடன் கலந்துரையாடிய சரத்குமார், அவர்களுக்கு சில டாஸ்க்குகளை கொடுத்து உற்சாகப்படுத்தினார். அவர் எடுத்து வந்த பெட்டியில் ரூ.3 லட்சம் பணம் இருந்தது.  அந்த பெட்டியில் இருந்த பணத்தைவிட, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றதற்கு வழங்கப்பட்ட சம்பளம் அதிகம் என சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது. நடிகர் கமல்ஹாசன் ஒரு நாள் தொகுத்து வழங்க கோடிக்கணக்கில் வாங்கும்போது, இதெல்லாம் சாதரணமப்பா என கடந்து செல்லத்தான் தோன்றுகிறது.

நேற்றைய ப்ரோமோவில் காலையிலேயே பரிசுத்தொகை ரூ.5 லட்சமாகவும், பிறகு சிறிது நேரத்தில் ரூ.7 லட்சமாகவும் மாற்றப்பட்டதை போல் காட்டப்பட்டுள்ளது. நேற்று 3 லட்சத்தை பார்த்ததும் யாரும் எடுக்க மாட்டார்கள் என அமீர் கூறினார். ஆனால் தான் எடுக்க வாய்ப்புள்ளதாக நிரூப் மற்றும் பாவனி மட்டுமே சொன்னார்கள். ராஜுவும், பிரியங்காவும் அதை கண்டுகொள்ளவேயில்லை.

Bigg Boss tamil 5 Promo...

முன்பு  பணத்தை பற்றி பேசாதவர்கள்,நேற்று அதை பற்றிய ஆலோசனையை துவக்கினர். 5 லட்சம் இருக்கும் பெட்டியை பார்த்து விட்டு, இதோடு ஒரு 4, ஒரு ஜீரோ இருந்தால் நான் எடுத்துக் கொண்டு போய் கொண்டே இருப்பேன் என்கிறார் பிரியங்கா. 15 லட்சம் இருந்தால் யோசிக்கலாம் என்கிறார் பாவனி. இந்த தொகை 25 லட்சம் வரை போகலாம் என்கிறார் நிரூப். ஆனால் எவ்வளவு வைத்தாலும் எடுக்க மாட்டேன் என்கிறார் தாமரை. பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை படிப்படியாக உயர உயர போட்டியாளர்களின் மனநிலை மாறிக் கொண்டே வருகிறது.

Bigg Boss tamil 5 Promo...

இந்நிலையில் இன்று 7 லட்சமாக இருந்த பரிசு தொகை 12 லட்சமாக உயர உடனே அமீர் தான் டிக்கெட் பினாலேவில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றிருந்தாலும் தனக்கு முதலிடத்தை பிடிப்பேன்  என்கிற நம்பிக்கை இல்லை எனவே இந்த பணத்துடன் தான் வெளியேற உள்ளதாக அமீர் குறிப்பிடுகிறார். அவரை தொடர்ந்து தனக்கும் வெற்றி பெறுவேன் என்கிற கான்பிடன்ட்  இல்லை என சிபி கூறுகிறார். இவர்களின் பேச்சுக்களால் மற்ற ஹவுஸ் மேட்ஸ் செம குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் திடீர் டுவிஸ்ட் அடித்த அமீர் தான் பிராங் செய்ததாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios