பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் வார இறுதி நாளான நேற்றும், இன்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தோன்ற உள்ளார். இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஆஜித், பாலாஜி, சுரேஷ், ஆரி மற்றும் அனிதா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி வீட்டை விட்டு வெளியேறும் நிலையில், அது யார் என்ற ஒரு பரபரப்பு இப்போதே பார்வையாளர்களிடம் தொற்றிக் கொண்டுள்ளது.

 

இதையும் படிங்க: அஜித்துடன் ‘ரெட்’ படத்தில் நடித்த நடிகையா இது?... 43 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்கும் போட்டோ...

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் சனம் ஷெட்டி, சுரேஷ் பிரச்சனையை பற்றி பேசிய புரோமோ வீடியோக்கள் வெளியாகின. வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் வெடித்துச் சிதறினாலும், வாடா, போடா எனும் அளவிற்கு பிரச்சனை வெடித்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. இப்படி இன்றைய ஞாயிற்றுக்கிழமையை பல விஷயங்கள் சுவாரஸ்சியமாகியுள்ள நிலையில், அனிதா சம்பத்தை கமல் ஹாசன் கலாய்க்கும் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: சன் டி.வி. ரசிகர்களுக்கு அதிர்ச்சி... விரைவில் நிறுத்தப்படுகிறது பிரபல சீரியல்...!

இந்த வாரம் நடந்த போட்டியின் போது தனக்கு பேச யாருமே ஸ்பேஸ் தரவில்லை... நான் ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை, பொண்ணு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி என அனிதா சம்பத் அழுது புலம்ப ஆரம்பித்தார். அவரை ஆரி, ரியோ ஆகியோர் சமாதனப்படுத்த முயன்றனர். அதை சுட்டிக்காட்டியுள்ள கமல் ஹாசன், அனிதாவிற்கு யாருமே ஸ்பேஸ் தர மாட்டேங்கிறீங்க? என பேச்சை ஆரம்பித்தார். உடனே முந்திக்கொண்ட அனிதா, இடைப்பட்ட நிலையில் இருக்கும் என்னை போன்றவர்கள் பேசினால் யாரும் கேட்பதில்லை என சொல்ல, அவரை வழிமறித்த கமலோ நீங்கள் தான் யாருக்கும் ஸ்பேஸ் தரவில்லை என எனக்கு தோன்றுகிறது என கூறினார். சார்... நீங்க என்ன எது சொன்னாலும் கலாய்க்குற மாதிரியே இருக்கு என அனிதா கூற, கமல் ஹாசனும் கண்டுபிடிச்சிட்டாங்கப்பா என சிரிக்கிறார்... இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.