முதலில் பரணி தவறு எதுவும் செய்யாமலேயே... பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவராலும் கார்னர் செய்யப்பட்டு ஒரு நிலையில் சுவர் ஏறி குதித்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்ட பின்  நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் .

இவரை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவராலும் ஓரம் கட்டப்பட்டும், ஆரவ் மீது வைத்த காதல் தோல்வி அடைந்ததாலும் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறியவர் ஓவியா.

இவர்கள் இருவரை அடுத்து தற்போது தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று நடுநிலையாக இருக்கும் கணேஷை அனைவரும் ஒதுக்க ஆரம்பித்து... அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவது போல் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில், ஏற்கவே கணேஷை முட்டை திருடுகிறார் என கூறிவரும் வையாபுரி "கணேஷ் எப்போதுமே சுயநலம் உள்ளவர் என கூறுகிறார்".. அதே போல சக்தி, யோகா, டயட் ஆகியவற்றில்  உங்களுக்கு உள்ள ஈடுபாடு ஏன் ஒரு பிரச்சனை என்று வரும்போது இல்லை என்று கேட்கிறார். 

பின் இவரிடம் பல கேள்விகள் எழுப்புகின்றனர் போட்டியாளர்கள். இவர்கள் கேட்கும் கேள்விகளால் கார்னர் செய்யப்படுவதை அறிந்து நிலைகுலைந்து போய் விடும் கணேஷை இந்த ப்ரோமோவில் பார்க்கமுடிகிறது.