Bigg Boss Julie Exclusive interview on Protest
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களால மக்கள் என்னைப் பழைய ஜூலியா பாக்கல. மக்கள் ஏத்துக்கிட்டா, நான் மீண்டும் களத்துல இறங்கத் தயார் என ஜூலி பேட்டியில் கூறியுள்ளார்.
பிக் பாஸ் 100 நாட்கள் முடிந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தற்போது அடுத்தகட்டத்தில் உள்ளனர். ஆனால், ஜூலி, ஷக்தி, காயத்ரி ரகுராம் என மூவரும் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.
அதுவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னை முன்னிலை படுத்திக்கொண்டு அதில் கிடைத்த வீரத்தமிழச்சி என பெயரை வைத்துக்கொண்டு பிக் பாஸில் கலந்து கொண்டார் ஜூலி.
அவர் உள்ளே செல்லும் வரை அவரின் சுயரூபம் தெரியவில்லை, உள்ளே சென்று மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் அவரின் உண்மையான முகம் தெரிந்தது. வீண் பழி போடுவது, அப்பட்டமாக புளுகுவது என அடுக்கடுக்காக தன்னுடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தினார்.
.jpg)
எந்த இமேஜை வைத்துக்கொண்டு பிக் பாஸுக்கு போனாரோ அதே இமேஜ் பிக் பாஸிலிருந்து வரும்போது டேமேஜானது. ஜூலியும் வெளியேற்றப்பட்டார். பிறகு வெளியுலகத்திற்கு தலை காட்டாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தார்.
அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்த நிலையில் தற்போது பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த பேட்டியிலும், ஜூலி உண்மை பேசுவதாகவே தெரியவில்லை... இதில் அவரைப் பற்றி வந்த 'மீம்ஸ்' எல்லாம் பாத்தீங்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் என்னைப் பற்றி 'மீம்ஸ்' போட்டவங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நல்ல மீம்ஸ் போட்டவங்களுக்கு மிக்க நன்றிகள், என்னைத் திட்டி மீம்ஸ் போட்டவங்களுக்கு ரொம்ப நன்றிகள். நீங்க தான் பிக் பாஸ் முடிஞ்சு இத்தனை நாளாகியும் என்னை மக்களுக்கு நினைவுபடுத்திக்கிட்டே இருக்கிறார்கள்.
நிறைய பேர் என்கிட்டயே சொன்னாங்க, 'உங்களைப் பத்தி மீம்ஸ் போட்டு எங்க பேஜ்க்கு நிறைய பேர் வந்தாங்க, பணம்லாம் சம்பாரிச்சோம்'ன்னு. என்னால இது நடந்தது சந்தோஷம். அதே நேரம், நானும் மனுஷிதான். எனக்கும் இதயம் இருக்கு, அதைக் காயப்படுத்தினா எனக்கும் வலிக்கும். கொஞ்சம் பாத்து பண்ணுங்க.
.jpg)
நாட்டில் இப்பவும் பல பிரச்ச்சனைகள், போராட்டங்கள் நடந்துக்கிட்டுருக்கு. அனால், இப்படிப்பட்ட விஷயங்களால மக்கள் என்னைப் பழைய ஜூலியா பாக்கல. மக்கள் ஏத்துக்கிட்டா, நான் மீண்டும் களத்துல இறங்கிப் போராட தயாராக இருக்கிறேன் என தனது பேட்டியில் கூறியுள்ளார்.
