பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய, தனலட்சுமி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், பொதுமக்கள் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடியவர் தனலட்சுமி. டிக் டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பெரிதாக யாருக்கும் பரிச்சியம் இல்லாத முகமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து.. பல விமர்சனங்களுக்கு ஆளான தனலட்சுமி வெற்றிகரமாக 70-நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து விளையாடினார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அசீமுக்கு எதிராக நடந்து கொண்ட இவர், அசீம் தான் வெற்றியாளர் என தெரிந்ததும் அவருக்கு ஜால்றா தட்டுவது போல் சில பேட்டிகள் கொடுத்தது மட்டும் இன்றி, மற்ற போட்டியாளர்கள் பற்றியும் விமர்சித்து பேசினார். இதனால் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்களின் இவர் மட்டும் தனித்தே இருந்து வருகிறார். அதே போல் இவர் எதிர்பார்த்தது போல் எந்த ஒரு பட வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை.

Top 10 TRP: பலத்த அடி.. இது ஏன்னா எதிர்நீச்சலுக்கு வந்த சோதனை? கெத்து காட்டும் சிங்க பெண்ணே டாப் 10 பட்டியல்!

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தனலட்சுமி தற்போது கண்ணீர் விட்டு அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு அவர் 'முன்னதாக வாழ்க்கையின் முடிவு மரணம்' என்கிற கேப்ஷன் கொடுத்த நிலையில், பின்னர் அதை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. தனலட்சுமி கண் கலங்கி அழுவதை பார்த்து ரசிகர்கள் பலர் இவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வருவதோடு... என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

View post on Instagram