அழகா இருக்குறனு சொன்னா கூட சண்டை நடக்குது பிக் பாஸில்; ரித்விகாவிடம் மாட்டிக்கொண்டு திணறும் வைஷ்ணவி!

https://static.asianetnews.com/images/authors/ea14f421-6212-5fd4-a5ec-f2773be89cf5.jpg
First Published 9, Aug 2018, 6:23 PM IST
Bigg Boss 2; Vaishnavi struggling to ritvika caught!
Highlights

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் பிரமோவில் ஏற்கனவே வைஷ்ணவி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் கூட அவர் என்னை இந்த வீட்டில் யார் யார் எப்படி பேசினீங்கனு எனக்கு தெரியும். என்னால அத பிரிச்சு பாத்து சொல்ல முடியும். 

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் பிரமோவில் ஏற்கனவே வைஷ்ணவி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் கூட அவர் என்னை இந்த வீட்டில் யார் யார் எப்படி பேசினீங்கனு எனக்கு தெரியும். என்னால அத பிரிச்சு பாத்து சொல்ல முடியும். அந்த தகுதி எனக்கு இருக்கு என்று கண்ணீருடன் பேசியிருந்தார். தற்போது வெளிவந்திருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்னொரு பிரமோவில் வைஷ்ணவிக்கும் ரித்விகாவிற்கும் இடையே சண்டை வரப்போகிறது என்பது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

அந்த பிரமோவின் போது வைஷ்ணவி ரித்விகாவிடம் எதுக்கு மேக்கப் போடுற? என கேட்கிறார். அதற்கு அவர் நான் லை மேக்கப் தானே போட்டுருக்கேன் என சாதாரணமாக தான் பதிலளிக்கிறார். தொடர்ந்து வைஷ்ணவி கூறிய வார்த்தைகள் தான் ரித்விகாவின் கோபத்தை தூண்டுகிறது. நீ அழகா தான் இருக்க எதுக்கு மேக்கப் போடுற மேக்கப் போடாத என்கிறார் வைஷ்ணவி. அப்போது ரித்விகா ஏன் அப்படி சொல்றீங்க? அழகா தான் இருக்கனு.

 

எனக்கு அது தெரியும். என் தோற்றம் பற்றி எனக்கு தன்னம்பிக்கை இருக்கு நீங்க எதுக்கு நீ அழகா தான் இருக்கனு சொல்றீங்க என தாறுமாறாக கேள்வி கேட்கிறார்.தொடர்ந்து வைஷ்ணவி நீ மேக்கம் இல்லாம அழகா இருக்குற அப்படி இருக்குறது தான் எனக்கு பிடிச்சிருக்குனு சொல்ல வந்தேன் என சமாளிக்கிறார். இந்த காட்சியில் வைஷ்ணவியை பார்க்கவும் பாவமாக தான் இருக்கிறது. சர்வாதிகாரி டாஸ்கிற்கு பிறகு எந்த சூடான விஷயமும் நடக்கவில்லை போல அதான் பிக் பாஸ் இப்படி பெட்டி கேஸை எல்லாம் பிரமோவில் போட்டுக்கொண்டிருக்கிறார்.

loader