பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடியவர் நடிகை வனிதா விஜயகுமார். தன்னுடைய குரலை அதிகம் உயர்த்தி, போட்டியாளர்கள் அனைவரையும் மிரட்டி வருவதாக ரசிகர்கள் எண்ணினர். இதன் காரணமாக மூன்றாவது வாரத்தில் இரண்டாவது போட்டியாளராக கடந்த வாரம் வெளியேறினார்.

ஆனால், வனிதாவை ஆதரித்த பலர், மீண்டும் வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என, தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.    

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா, தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில், இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், கடந்த 1995 ஆம் ஆண்டு, நடிகர் விஜய்யுடன் இவர் நடித்த, சந்திரா லேகா படம் குறித்த அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் விஜய்யுடன் நடித்த சந்திரா லேகா திரைப்படம், கிராம புறம் மற்றும் காடு நிறைந்த இடங்களில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் நான் சிறு வயதில் இருந்ததே மிகவும் வசதியாக வளர்ந்த பெண். எங்க வீடு பெட் ரூம் முதல் பாத் ரூம் வரை மிகவும் பெரியது. குறிப்பாக அம்மா அப்படி தான் பார்த்து பார்த்து அனைத்து வீட்டையும் காட்டினார்.   

ஆனால் படப்பிடிப்பு நடந்த இடத்தின் அருகே எந்த ஒரு ஸ்டார் ஓட்டலும் இல்லை. கிராமங்களில் இருந்த வீடுகளில் தான், நான் அம்மா மற்றும் பாட்டி ஆகியோர் தங்கினோம். மேலும் சில சமயங்களில் ட்ரெஸ் மாற்றுவதற்கு கூட இடங்கள் இருக்காது. அப்படி ஒரு முறை காட்டிற்குள் உடை மற்ற கூறினார் இயக்குனர்.

ஆனால் நான் முடியாது என சண்டை போட்டேன். பின் அங்கு வந்த விஜய். அவருடைய கார் சாவியை கொடுத்து, காரிலேயே தன்னை உடை மாற்றி கொள்ள சொன்னார் என்று 24  ஆண்டுகளுக்கு முன் விஜய் தனக்கு செய்த உதவியை தற்போது கூறியுள்ளார் .