’என்னுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதுபோல் நடந்துகொள். அப்போதுதான் நாம் தயாரிக்கும் படம் ஓடும்’ என்று கூறி என் வாழ்க்கையை நாசம் செய்தவர் வனிதா விஜயகுமார் என்று கூறி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இலவச விளம்பரம் கொடுத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டரும் ஒரு காலத்தில் அவரது தீவிர காதலருமான ராபர்ட்.

வனிதா விஜயகுமார் தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார். இவர்கள் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் சுற்றி திரிந்த நிலையில் ராபர்ட்டை  கதாநாயகராக வைத்து ’எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்ற படத்தை வனிதா தயாரித்தார். இந்த படம் படத்துக்கக செலவழிக்கப்பட்ட பெட்ரோல்,டீஸல் காசைக்கூட வசூலிக்கவில்லை.

இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாக கூறப்படுகிறது. தற்போது வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ' எனக்கும் வனிதாவுக்கும்  நடிகர் தயாரிப்பாளர் என்ற உறவை தாண்டி  எதுவும் கிடையாது. அவருக்கு பப்ளிசிட்டி என்றால் மிகவும் பிடிக்கும். அவர் படத்தின் புரொமோஷனுக்காக சில புகைப்படங்கள் எடுத்தார். அதனால் எங்களுக்குள் உறவு இருக்கிறது என்று பலரும் நினைத்து விட்டார்கள். சில நேர்காணல்களில் அவர் என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது போல தான் கூறினார். நான் பதறிப்போய் கேட்டதற்கு அப்படி சொன்னால் தான், நம் படத்தை பார்க்க மக்கள் வருவார்கள் என்றார். இதனால்   என் மனைவி என்னை திட்டி தீர்த்தார். மற்றபடி எங்களுக்கிடையில் வேறு எந்தவிதமான நட்பும் இல்லை. அவர் தயாரிப்பாளர். நான் அவரது படத்தில் பணிபுரிந்தேன். அவ்வளவு தான்' என்றார். 

இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசிய அவர், 'பிக் பாஸ் வீட்டுக்குள் எல்லாருமே போலியாக தான் இருக்கிறார்கள். பிக்பாஸில் உடை  விஷயத்தில் சர்வ சுதந்திரமாக இருக்கிறார்கள்.  ஆண்கள் இதுவரை விட்டுக்கொடுத்தே செல்கின்றனர். அவரவர்கள் தங்கள் முகத்தை காட்டினால் தான் ஆட்டம் களைக்கட்டும் என்றவரிடம்  நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா? என்று கேட்கப்பட்ட போது, 'நிச்சயமாக ஆனால் இந்த சீஸனில் இல்லை. அடுத்த சீஸனில் அழைத்தால் ஒருவேளை போகலாம். இந்த சீசனில் போனால், இவரால் வனிதாவை பார்க்காமல் இருக்க முடியாது போல, அதனால்  சுவரேறிக் குதித்து ஜன்னலை உடைத்து உள்ளே சென்று விட்டார் என்றெல்லாம் புரளியைக் கிளப்பி விடுவார்கள்’என்கிறார் ராபர்ட். இவ்வளவு உண்மைகளைப் பேசும் ராபர்ட் அப்பட நிகழ்வின்போது வனிதாவின் பெயரை கொட்டை எழுத்துக்களில் தன் உடம்பில் பச்சை குத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.