கமலிடம் தன் ஆசையை சொன்ன வனிதா...!  மேடையில் நிகழ்ந்த தரமான சம்பவம்..! 

பிக் பாஸ் சீசன் 3 இல் முகேஷ் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார். 100 நாள் நிறைவு விழாவாக நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏற்கனவே கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருந்தனர்.

டைட்டில் வின்னர் அறிவிக்க பட்டதற்கு முன்பாகவே பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்ட மற்ற போட்டியாளர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கு உண்டான சிறப்பு பரிசை வழங்கி கௌரவித்தனர். அவர்களையும் மேடைக்கு அழைத்தனர்.

அப்போது வனிதா சிறப்பு பரிசு பெற்ற பின், தன்னுடைய ஆசை ஒன்றை கமலிடம் தெரிவிக்கிறார். அதாவது வனிதா தன்னுடைய "இரு மகள்களையும் மேடைக்கு அழைத்து... தான் பெற்ற சிறப்பு பரிசு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து... இது இவர்களுக்கு தான் சொந்தம் என பெருமையாக பேசி, அவர்களை அனுப்பிவிட்டு பின்னர் எனக்கு ஒரு ஆசை உள்ளது என கமலிடம் தெரிவிக்கிறார்.

சொல்லுங்கள் என கமல் கேட்கவே. அப்போது "எனக்கு உங்களுடன் நடிக்க ஆசையாக உள்ளது. ஏதாவது ஒரு ரோல் உங்கள் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என கேட்டுக்கொண்டார். அப்போது கண்டிப்பாக ... கண்டிப்பாக என கமல் தெரிவித்திருந்தார். மேடையிலேயே  கமலின் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதை பார்த்து அனைவரும் வனிதாவை உற்றுப் பார்த்தனர்.