உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான வைஷ்ணவி, தற்போது தன்னுடைய மூன்று வருட காதலர் அஞ்சன் என்பவரை,  மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரபல வானொலி ஒன்றில் ஆர்.ஜே வாக பணியாற்றி தன்னுடைய குரல் மூலம் பல்வேறு சமூக கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றவர் வைஷ்ணவி.  இவர் பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த வருடம் 'பிக்பாஸ்' தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார்.  இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது ஒருவரைப் பற்றி மற்றொரு நபரிடம் புறம் பேசுகிறார் என மக்களால் விமர்சிக்கப்பட்டார். 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களிடம் சமூக வலைத்தளம் மூலம் உரையாடி வந்தார், மேலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 3 வருடமாக அஞ்சன் என்கிற விமானி ஒருவரை  காதலித்து வந்த வைஷ்ணவி,  இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார்.

 

தற்போது, வைஷ்ணவி மற்றும் அஞ்சன் திருமணம் நெருங்கிய குடும்ப உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தில் வைஷ்ணவி நீல நிற புடவையில் இருக்கிறார். அஞ்சானும் நீலநிற சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து உள்ளார்.  

 

இதைத்தொடர்ந்து இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.  இதில் சிவப்பு நிற கவுன் அணிந்துள்ளார் வைஷ்ணவி. அஞ்சன் கிரே கலர் கோட் அணிந்துள்ளார். தற்போது, இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.