பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், ஆர்.ஜே.வைஷ்ணவி.

இந்த நிகழ்ச்சியில், ஐஸ்வர்யாவிற்கு பின் அதிகம் விமர்சனங்களை சந்தித்தவர் வைஷ்ணவி தான். காரணம் ஒருவரை பற்றி மற்றொருவரிடம் புரம் கூறி,  பல சமயங்களில் வசமாக சிக்கினார். மேலும் வெளியேற்றப்பட்ட பின் இவருக்கு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விலையாக சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்க ஆர்வம் காட்ட வில்லை என்றாலும், சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்குகிறார். தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் புதிய புதிய புகைப்பங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் பிக்பாஸ் தோழி, ரம்யாவை சமீபத்தில் வைஷ்ணவி சந்தித்துள்ளார். அப்போது ரம்யா வைஷ்ணவி கன்னத்தில் மிகவும் பாசமாக முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, "பொண்டாட்டி ரம்யா என்எஸ்கே " என குறிப்பிட்டிருந்தார்.

வைஷ்ணவியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், சும்மா விடுவார்களா... " வைஷ்ணவி ரம்யா பொண்டாட்டியா?  என கிண்டலடிக்கும் விதத்தில் பல்வேறு கமெண்டுகள் போட்டுவந்தனர். இதை பார்த்து கடுப்பான வைஷ்ணவி தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது. "என்னை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.  ஆனால் சில சமயங்களில் முரண்பாடான விமர்சனங்களை கொடுப்பவர்களும் உள்ளனர். என்னுடைய தோழி என் கண்ணத்தில் முத்தமிடுகிறாள் அதற்கு இப்படி எல்லாம் மோசமாக விமர்சிப்பதா என பதிலடி கொடுத்துள்ளார் .