பிக்பாஸ் வீட்டின் விதி படி, விதியை மீறுபவர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்ப படுவார்கள். ஆனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் விதியை மீறியதற்காக, லக்ஸூரி பட்ஜெட் குறைக்கப்படுகிறது. அது என்ன விதிமீறல் என்பதை தொகுப்பாளர் கமல் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தெரிவிக்கிறார்.

இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், போட்டியாளர்களை பார்த்து இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட்  ஏன், குறைக்கப்பட்டது தெரியுமா என கேள்வி எழுப்புகிறார். இதற்கு, வனிதா உட்பட மற்றவர்கள் அனைவரும் தெரியாது என பதில் கூறுகிறார்கள்.

பின் இது ஒரு விதிமீறல், விதி மீறல் விளையாட்டில் இருவருமே வெற்றி பெற முடியாது என்பதை மீண்டும் நான் தெரிவித்து கொள்கிறேன் என கூறுகிறார். இது ஒரு குறும்படம் அல்ல விளக்கப்படம் என கூறி குறும்படம் ஒன்று ஒளிபரப்ப படுகிறது.  பின் யாரோ இருவர் சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருப்பது போல் ஒரு காட்சி காட்டப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு அது லாஸ்லியா - கவின் போல் தெரிகிறது. ஆனால் இன்றைய ஷோவை பார்த்தல் தான், உண்மையில் விதி மீறல் செய்தது யார் என்பது தெரியும்.

எனவே இன்றைய ஷோ எதிர்பார்த்ததை விட சூடு பிடிக்கும் என தெரிகிறது.