ஏற்கனவே பிரச்சனைகளுக்கு குறைவில்லாத, பிக்பாஸ் வீட்டில்... இப்போது ஒரு புது பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வந்த, கொலைக்காரன் விளையாட்டில் எந்த இரண்டு போட்டியாளர் முழு ஒத்துழைப்பு தரவில்லை என பிக்பாஸ் கேட்ட போது, பிக்பாஸ் வீட்டின் கேப்டன் அபிராமி சேரன் மற்றும் சரவணன் பெயரை கூறினார்.

இவரின் இந்த கணிப்புக்கு ஒருசிலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் சரவணன், நான் என்ன ஒத்துழைப்பு தர வில்லை. டாஸ்க் கொடுத்திருந்தால் கண்டிப்பாக செய்திருப்பேன் என பேசினார். 

இதனால் இவர்களுடைய முடிவை மாற்றலாம் என பிக்பாஸ் கூறியதை தொடர்ந்து, யார் ஜெயில் உள்ளே இருக்க போகிறார் என்கிற கேள்வி எழுந்து பிரச்சனை உருவாகியது இது ஒரு புறம் இருக்க. 

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், "தர்ஷன் ஒரு சில காரணங்களை கூறி, சாக்ஷி பெயரை கூறுகிறார். இதற்கு வனிதா சாக்ஷியை வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள், ஆனால் அது சரியல்ல என கூறுகிறார்.

வனிதாவின் வார்த்தையை தர்ஷன் எதிர்த்து பேசியதால், கோபமான வனிதா கத்துகிறார். இதற்கு தர்ஷன் உங்க கருத்தை நீங்கள் சொல்லும்போது எனக்கும் சொல்ல உரிமை உள்ளது. பாதி விளையாட்டு விளையாடிய பிறகு ரூல்ஸை மாற்றவேண்டும் என்றால் எப்படி என தர்ஷனும் குரலை உயர்த்துகிறார்.

உடனே வனிதா, சம்பந்தமே இல்லாத விஷயத்தில் நீ ஏன் உள்ளே வர? பிக்பஸ்ஸை கூப்பிடு என கையில் இருந்த இருந்த தலையணையை விசிறி அடித்து, சண்டைக்கு தயாராகும் காட்சி இடம்பெற்றுள்ளது.