பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் கோல்டன் டிக்கெட்டை வெல்ல போவது யார் என்றும், வெளியேற போவது யார் என்கிற கேள்வியும் இப்போதே ரசிகர்கள் மனதில் எழ துவங்கி விட்டது.

கோல்டன் டிக்கெட் டாஸ்கை பொறுத்தவரை, முன்னிலையில் இருப்பது தர்ஷன் தான். எனவே அவர் கோல்டன் டிக்கெட்டை வென்று, நேரடியாக பிக்பாஸ் பைனலுக்குள் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் மற்ற போட்டியாளர்கள் அதிக பாயிண்ட்டுகளை பெற்று, கோல்டன் டிக்கெட்டை வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில்... தற்போது கொடுக்கப்படும் கடுமையான டாஸ்கை தாக்கு பிடிக்க முடியாமல், இந்த வாரம் இயக்குனர் சேரன் வெளியேற உள்ளதாக கிசுகிசுக்கப்படும் தகவல், சேரனின் ராசிக்காரர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

எனினும் இந்த வாரம் ஷெரின் வெளியேறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிக்பாஸ் ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த வார இறுதியில் யார் பைனலுக்குள் செல்வார்... யார் வெளியேறுவார் என்பது தெரியவரும். அதுவரை பொறுத்திருப்போம்.