பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம், சாக்ஷி மற்றும் லாஸ்லியா என இருவரையும் காதலிப்பது போல் கவின் நடந்து கொண்டதாக மிகப்பெரிய கலவரமே ஏற்பட்டது. குறிப்பாக சாக்ஷி தன்னை கவின் ஏமாற்றி விட்டார் என அழுது புலம்பிவிட்டார்.

தற்போது கவின் இருவரையும் சமாதம் செய்து, ஒரு வழியாக நல்லபடியாக மீண்டும் இவர்களின் நட்பு பயணம் துவங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கவின்னையும் லாஸ்லியாவையும் வைத்து கிண்டல் செய்கிறார்கள் மது மற்றும் ரேஷ்மா ஆகியோர். 

இதற்கு லாஸ்லியா, கவின்னிடம் சென்று கிராமத்து பாஷையில், இங்க உங்களை சைட் அடிக்குறேன்னு சொல்லுறாங்க பாருங்க என கூற, இதற்கு கவின் அந்த புள்ள தான் வந்த முதல் வாரமே யாருக்கும் தெரியாம, சைட் அடிப்பேன்னு சொல்லிடுச்சில, இப்போ தெரிஞ்சி போச்சி என கூறுகிறார்.

அந்த ப்ரோமோ இதோ: