இன்று காலை வெளியான இரண்டு ப்ரோமோக்களிலும், தெர்மாகோல் நிரப்ப பட்ட மற்ற போட்டியாளரின் பையில் இருக்கும் தெர்மாகோலை மற்ற போட்டியாளர்கள், அவர்கள் பின்னல் ஓடி சென்று கீழே விழ வைக்க வேண்டிய போட்டியை விளையாடினார்கள். இதனால் கவினுக்கும் - தர்ஷனுக்கும் இடையே பிரச்னையும் வெடித்தது ப்ரோமோவில் காட்டப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... 'பசல் பிளாஸ்ட்' என்கிற டாஸ்க்... டிக்கெட் பினாலேவின் 6 வது  டாஸ்காக கொடுக்கப்படுகிறது. 

இந்த போட்டியில்... ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு வின்னர் என்கிற எழுத்துக்களும், அவரவர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட  பசில்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை போட்டியாளர்கள் அடுக்கி வைத்து விட்டு, மற்ற போட்டியாளர்கள் தாங்கள் அடுக்கி வைத்ததை கலக்காத வாறு பார்த்து கொள்ள வேண்டும்.

கவின், ஷெரின், தர்ஷன், சாண்டி, சேரன் என அனைவரும் முழுமையாக அடுக்கி வைத்து விட்டனர். அதே போல் சிலர் அவர்கள் அடுக்கியவற்றை கலைப்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். ஆனால் சேரனோ... தன்னுடையதை யாரும் கலைக்க கூடாது... வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற நோக்கத்தில் அடுக்கியவற்றை குரங்கு பிடியாக பிடித்து கொண்டுள்ள காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 

அந்த ப்ரோமோ இதோ