Asianet News TamilAsianet News Tamil

ஒரு வருடம் முடிந்துவிட்டது..? அன்பு பரிசால் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகத்!

பிரபல நடிகரும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவருமான மகத், பிரபல மாடலும், இந்திய அழகியுமான, பிராய்ச்சி மிஸ்ராவை இந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
 

bigboss star mahath give the sweet gift for her wife
Author
Chennai, First Published Apr 19, 2020, 3:39 PM IST

பிரபல நடிகரும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவருமான மகத், பிரபல மாடலும், இந்திய அழகியுமான, பிராய்ச்சி மிஸ்ராவை இந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

வெகுவிமர்சியாக  நடந்த இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். அந்த வகையில், இவர்களுடைய திருமணத்தில் பிரபல முன்னணி நடிகரும், மகத்தின் நீண்ட வருட தோழருமான நடிகர் சிம்பு கலந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

bigboss star mahath give the sweet gift for her wife

இந்த நிலையில் பிராய்ச்சி - மகத்தின் திருமண நிச்சயதார்த்தம்,  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் தான் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் முழுமை நிறைவடைவதை கொண்டாடும் விதமாக, மகத் தன்னுடைய காதல் மனைவிக்கு, வெள்ளை நிற டி- ஷர்ட்டில்,  ‘Loving Quarantine Wife Life' என்று தன்னுடைய கைகளினாலேயே  பெயிண்டிங் செய்து பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

bigboss star mahath give the sweet gift for her wife

மேலும் இந்த டி -சர்ட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பிராய்ச்சி, ’ஒரு வருடம் முடிந்துவிட்டது.... இந்த ஒரு வருட வாழ்க்கை  முற்றிலும் வித்தியாசமாக இருந்ததாகவு. நாங்கள் இப்போது வீட்டின் உள்ளேயே இருந்தாலும்  சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios