இன்றைய தினம், தற்போது இறுதி போட்டியில் யார் வெற்றிபெறுவர் என போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், ஒரு போர்டில் வைக்கப்பட்டுள்ள எண்களின் அடிப்படையில் போட்டியாளர்களின் புகைப்படங்களை அடுக்கி, அதன் காரணத்தை கூற வேண்டும் என்கிற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், நடிகர் சேரன் அனைவருடைய பெயர்களையும் வரிசையாக வைத்த பின், தன்னுடைய பெயரை முதலில் வைத்து, தான் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவேன் என கூறுகிறார்.

இதற்கு அவர் காரணமாக கூறுவது என்னவென்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் வயது அதிகமானவன் நான், அதே போல் அனுபவமும் தனக்கு அதிகம். நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன் என கூறியதும் அனைவரும் இதில் இளைஞகர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என கூறினார்கள். 

அதே போல் இங்கு இருக்கும் அனைவருக்கும் ரசிகர்கள் உள்ளனர். ஆர்மிகள் உள்ளது. உங்கள் ரசிகர்கள் அனைவருமே எனக்கும் ரசிகர்கள் என கூறி தன்னுடைய படத்தை முதல் எண்ணில் பொருந்துகிறார். சேரன் தான் வெற்றி பெறுவேன் என கூறி கொண்டு சொல்லும் காரணங்களை மக்கள் ஏற்றுகொள்வார்களா...? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.